மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை எழும்பூரில், தமிழ் இலக்கமுறை நூலகம் அமைத்து, அதற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பெயர் சூட்டப்படும் என பா.ம.க தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
x
மக்களவை தேர்தலுக்கான பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை தியாகராயநகரில் வெளியிட்டார்.
 
* அதில் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் வழங்கும் குறைந்தபட்ச அடிப்படை வருமான திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* சிறு, குறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு 6 ஆயிரம் மானியம் போதுமானதல்ல என்பதால், இதை ஏக்கருக்கு 10 ஆயிரமாக உயர்த்த பாடுபடுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழக அரசிடம் ஆயிரம் கோடி நிதியுதவி பெற்று, சென்னை எழும்பூரில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில், தமிழ் இலக்கமுறை நூலகம் அமைத்து, அதற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பெயர் சூட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது பெற்று தர பாடுபடுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* பயிர் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி, சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்கள் நலன், மது-புகையிலை ஒழிப்பு உள்பட பல வாக்குறுதிகளை பா.ம.க அளித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்