சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு

தி.மு.க முன்னாள் அமைச்சர் மகனுக்கு 7 ஆண்டு சிறை
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு
x
மறைந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன், கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக 78 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி, குற்றம்சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.இதைத்தொடர்ந்து, மணி அன்பழகன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

Next Story

மேலும் செய்திகள்