எவ்வளவு காசு இருந்தாலும், எளிமையாக கல்யாணம் : பாரம்பரிய முறையில் கைகோர்த்த பட்டதாரி ஜோடி

காசு எவ்வளவு இருந்தாலும், பாரம்பரியத்தை கைவிட கூடாது என்பதற்காக மிக எளிமையாக கல்யாணம் செய்யும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.
எவ்வளவு காசு இருந்தாலும், எளிமையாக கல்யாணம் : பாரம்பரிய முறையில் கைகோர்த்த பட்டதாரி ஜோடி
x
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி கிராமம். இங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் முன்னோர் கற்றுதந்த பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். காலத்திற்கு ஏற்றார் போல் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் திருமணச் சடங்குகளை மட்டும் மாற்றி கொள்ளாமல், பாரம்பரிய முறைபடியே நடத்துகின்றனர். படித்து பட்டம் பெற்ற ராமகிருஷ்ணன் மற்றும் பவித்ராவின் கல்யாணம் மிக எளிமையாக ஊர் மந்தையில் நடைபெற்றது. தங்கள் முன்னோர்கள் கடைபிடித்த சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக மணமக்கள் தெரிவித்தனர். பாரம்பரிய ஆட்டம், பாட்டம் என மணவிழா களைகட்டியது.

Next Story

மேலும் செய்திகள்