கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொல்ல முயற்சி : சுற்றி வளைத்த மாணவர்கள்
பதிவு : மார்ச் 09, 2019, 01:34 PM
திண்டிவனம் அருகே காதலை ஏற்க மறுத்த மாணவியை இளைஞர் ஒருவர் கல்லூரிக்குள் புகுந்து வெட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவியை, அந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் சந்தோஷ்குமார் ஒருதலையாக காதலித்து வந்த‌தாக கூறப்படுகிறது. ஆனால் சந்தோஷ்குமாரின் காதலை ஏற்க மாணவி  தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆந்திராவிற்கு சென்று சட்டக்கல்லூரியில் படித்துவரும் சந்தோஷ்குமார், கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் மாணவியிடம் தனது காதலை  வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அவர் மீண்டும் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த சந்தோஷ், மாணவியை கொல்ல அரிவாளுடன் கல்லூரிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அவரை கண்டு மாணவி கூச்சலிடவே, சக மாணவர்கள் சந்தோஷ்குமாரை கட்டுபடுத்த முயற்சித்துள்ளனர். அப்போது, சந்தோஷ் வெட்டியதில் அருண்பாண்டியன் என்ற மாணவருக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சக மாணவர்கள் சந்தோஷை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

பிற செய்திகள்

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.