ஸ்ரீவில்லிப்புதூர் : குடிநீர் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு - மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து ஸ்ரீவில்லிப்புதூரில் உள்ள கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிப்புதூர் : குடிநீர் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு - மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து ஸ்ரீவில்லிப்புதூரில் உள்ள கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் குறிப்பிட்ட சில வார்டுகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்