ரூ.2000 வழங்குவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ரூ.2000 வழங்குவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி
x
தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என தினேஷ் பாபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.மேலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் சிறப்பு நிதி வழங்குவது ஏற்புடையது அல்ல என்பதால் தேர்தல் முடிந்த பிறகு இதனை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது  அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே போன்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் உத்தரவு நகலையும் தாக்கல் செய்தார்.இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

Next Story

மேலும் செய்திகள்