அரிசி - கோதுமை விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா..?

இந்தியாவின் முக்கிய உணவு தானியங்களாக அரிசி, கோதுமை விலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காகத்தான் அவற்றை, அரசே கொள்முதல் செய்து வருகிறது.
x
விவசாயிகளிடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல்  செய்யவில்லை என்றால் வெளிச் சந்தைகளில் அவற்றின் விலையை கட்டுப்படுத்த முடியாது. விளைச்சல் குறைவது மட்டுமல்ல, அரசு கொள்முதல் செய்வது குறைந்தாலும், இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுறாங்க.

மாநில அரசின் கொள்முதல் கழகங்களும், மத்திய அரசின் இந்திய உணவுக் கழகமும் அந்த  பணிகளை செய்வதுடன்,  அப்படி கொள்முதல் செய்யப்படும் அரிசி, கோதுமை, போன்றவை பொது விநியோகத் திட்டம் மற்றும் பல சமூக நலத் திட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்படி கடந்த ஆண்டுகளில் கொள்முதல் செய்ய  நிர்ணயிக்கப்பட்ட இலக்கும்,  கொள்முதல் குறித்த விவரங்களையும் பார்க்கலாம்.
 
2019 - 20 ஆம் ஆண்டில் 3 புள்ளி 57 கோடி டன்  கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட  3 புள்ளி 2 கோடி டன் இலக்கில்,  3 புள்ளி 55 கோடி டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவரையில் 2012 -13 ஆம் ஆண்டில்தான் மிக அதிகபட்சமாக 3 புள்ளி 81 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

சாகுபடி செய்யும்  மாநிலங்களின் சீசனைப் பொறுத்து மத்திய பிரதேசத்தில்  மார்ச் 5 ஆம் தேதியிலிருந்து கொள்முதல் பணிகள் தொடங்குகின்றன.  பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து கொள்முதல் பணிகள் தொடங்க உள்ளன. அரிசி கொள்முதலைப் பொறுத்தவரை, 2018-19 ஆம் ஆண்டில  நிர்ணயிக்கப்பட்ட 3 புள்ளி 75 கோடி என்கிற இலக்கைவிட, கொள்முதல் அளவு குறைந்து 3 புள்ளி 6 கோடி டன் மட்டுமே எட்டப்பட்டிருக்கிறது.

அரிசி அதிகம் கொள்முதல் செய்யப்பட்ட மாநிலங்களில், பஞ்சாப்  முதலிடத்தில் உள்ளது. இங்கு 1 புள்ளி 13 கோடி டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கடுத்து  சட்டீஸ்கர் 40 லட்சம் டன்,  ஹரியானா 39 லட்சம் டன்,  ஒடிசா 30 லட்சம் டன்,  தெலுங்கானா 27 லட்சம் டன், ஆந்திரா 25 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் தமிழ்நாடு ரொம்ப ரொம்ப கடைசியா இருப்பதுதான் நமக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கும். தமிழ்நாட்டில் 7 லட்சம் டன் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெல் உற்பத்தி குறைவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கொண்டு வரப்போவதுதான் வருத்தமான விஷயமாக இருக்கும். 

ஆனா, இந்தியாவின் முக்கிய இரண்டு உணவு தானிய கொள்முதலில் அரசின் இலக்குகள் எட்டப்படுவதால், விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்பதும், உணவு பஞ்சம் வராது என்பதும் ஆறுதல் தரும் விஷயமா இருக்கும். ஆனால் இந்த நிலைமை தொடருமா என்பது விவசாயிகளின் கைகளில் தான் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்