"எம்.ஜி.ஆர் வீடு புதுப்பிக்க காரணமே தந்தி டிவி தான்"- சைதை துரைசாமி

கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு, புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
x
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் எண்ணம் கிராமத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு பாழடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்த செய்தி தந்தி தொலைக்காட்சியில் வெளியானது. இந்த நிலையில் சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தனது அறக்கட்டளையின் சார்பாக அந்த இல்லத்தை புதுப்பித்து தருவதாக கூறியிருந்தார். அதன்படி, வீட்டை புதுப்பித்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கேரள மாநில ஆளுநர் சதாசிவம், சைதை துரைசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

"எம்ஜிஆர் வீடு புதுப்பிக்க காரணமே தந்தி டிவி தான்" - முன்னாள் மேயர் சைதை துரைசாமி 

எம்ஜிஆரின் வீடு பற்றிய தகவலை வெளிக் கொண்டு வந்ததே தந்தி டிவி தான் என்றும், இதனாலேயே இந்த நிகழ்வு சாத்தியமாகி இருக்கிறது என சென்னை மாநகர முன்னாள் மேயர்  சைதை துரைசாமி தெரிவித்தார். 

"வீட்டை புதுப்பித்ததில் மகிழ்ச்சி" - எம்ஜிஆரின் உறவினர்கள் 

பாலக்காட்டில் இருந்த எம்ஜிஆரின் வீட்டை புதுப்பித்தது மகிழ்ச்சியளிப்பதாக எம்ஜிஆரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்