மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...

தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...
x
முதலாவதாக ஆந்திர மாநிலம் குண்டூருக்கு செல்லும் பிரதமர், எடுக்கார் புறவழிச்சாலையில் பல திட்டங்களை  தொடங்கி வைக்கிறார். விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள 1 புள்ளி 33 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அவசரகால பெட்ரோலியப் பொருட்கள் கிடங்கினை  நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கிறார்.  இதைத்தொடர்ந்து திருப்பூர் செல்லும் மோடி, ஈ எஸ் ஐ சி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய கட்டுமானத்திற்கும், சென்னை விமான நிலையத்தின் நவீனமயத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, எண்ணூர் கடலோர முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டிஎம்எஸ் இல் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான சென்னை மெட்ரோ பயணிகள் சேவையை மோடி தொடங்கி வைக்கிறார். இதன் பிறகு கர்நாடகா மாநிலம்  ஹூப்ளிக்கு செல்லும் பிரதமர்,  அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்