பிப். 8ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?

தமிழக பட்ஜெட்டில், கல்வி மற்றும் விளையாட்டு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கல்வியாளர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
x
தமிழக பட்ஜெட், வரும் 8ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில், 
கடந்த ஆண்டு, பட்ஜெட்டில், பள்ளிக்கல்விக்கு 27 ஆயிரம் கோடி ரூபாயும், உயர்கல்விக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள கல்வியாளர்கள், உயர்கல்வித் துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வசதியாக இந்த பட்ஜெட்டில், அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

உயர்கல்வி தரத்தை மேம்படுத்த குறைந்தது 10 ஆயிரம்  கோடி ரூபாயாவது பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கருத்தாக இருக்கிறது.

கல்வித்தரத்தை மேம்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், விளையாட்டு துறைக்கு கடந்த 2010ஆம் ஆண்டு வரை இருந்ததைப் போல தனியாக நிதி ஒதுக்கீடு செய்வது அவசியம் என்கின்றனர் உடற்கல்வி ஆசிரியர்கள்.

அடிப்படை கல்வி முதல், ஆராய்ச்சி கல்வி வரை தரமானதாக வழங்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும் பட்ஜெட் வழிவகை செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்கள், ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்