திரைப்படம் ரிலீஸ் தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் கைது

நடிகர் சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக இணையத்தில் மிரட்டல் விடுத்த சிம்பு ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திரைப்படம் ரிலீஸ் தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் கைது
x
நடிகர் சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, இணையத்தில் மிரட்டல் விடுத்த, சிம்பு ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்த மதன், வந்தா ராஜாவாகத் தான் வருவேன் திரைப் படத்தை அனைத்து திரையரங்குகளும் திரையிட வேண்டும் என இணையதளத்தில் மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக மதனின் மீது வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார், அவரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்