நடந்து சென்ற பெண்மணியிடம் நூதன முறையில் திருட்டு

சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மயக்க மருந்து தடவி நூதன முறையில் நகைகளை பறித்து சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
நடந்து சென்ற பெண்மணியிடம் நூதன முறையில் திருட்டு
x
அழகேசன் நகரை சேர்ந்த டெய்சி என்பவரிடம், ஒரு பெண்மணி வந்த பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் டெய்சி சிறிது தூரம் சென்றதும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்த போது கழுத்தில் அணிந்திருந்த கம்மல்களும், மோதிரமும் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கேமிராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் தனிப்படை அமைத்து, நகைகளை திருடிச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்