ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 9 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை ஜாக்டோ , ஜியோ அமைப்பு தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்
x
9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 9 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை ஜாக்டோ , ஜியோ அமைப்பு தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது. சென்னையில் நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சரின் வேண்டுகோள் மற்றும் நீதிமன்றத்தின் அறிவுரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள் இதனை அறிவித்தனர். 8 லட்சத்திற்கும் மேல் போராடிய நிலையில், இன்று போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டு உள்ளதால், நாளை பணிக்கு திரும்புவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். முதலமைச்சர் தங்களை அழைத்துப் பேச வேண்டும் என்றும், தங்கள் கோரிக்கைகள் அப்படியே தான் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சிறை சென்றவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் ஜாக்டோ, ஜியோ அமைப்பு நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர். 



பொதுத்தேர்வுகள், செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில்போராட்டம் வாபஸ்- ஜாக்டோ ஜியோ


Next Story

மேலும் செய்திகள்