கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
x
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக அறிவொளி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கான இதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்