நெல்லை : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கி கொள்ளை

நெல்லையில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிவிட்டு, கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கி கொள்ளை
x
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரமாணிக்கநகரில் தனது மனைவி மற்றும் மகளுடன், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சாமுவேல் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டிற்கு நுழைந்த திருடன், தனி அறையில் படுத்திருந்த சாமுவேலை தாக்கி, பீரோவில் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலை மற்றும் 60 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். இன்று காலை கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் மயங்கி கிடந்த சாமுவேலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்