தேசிய பேரிடர் நிவாரணம்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் ரூ. 7214 கோடி ஒதுக்கீடு

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து புதுச்சேரி மற்றும் 6 மாநிலங்களுக்கு 7 ஆயிரத்து 214 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தேசிய பேரிடர் நிவாரணம்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் ரூ. 7214 கோடி ஒதுக்கீடு
x
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 6 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 7 ஆயிரத்து 214 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

2018 மற்றும் 2019 நிதியாண்டில் வெள்ளம், நிலச் சரிவு, புயல், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் நிதித்துறை, உள்துறை, வேளாண்மை மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இமாச்சல பிரதேசத்துக்கு 317 கோடியே 44 லட்சம் ரூபாயும், உத்தர பிரதேசத்துக்கு 191 கோடியே 73 லட்சமும், ஆந்திராவுக்கு 900  கோடியே 40 லட்சமும், குஜராத்துக்கு 127 கோடியே 60 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுபோல, கர்நாடகாவுக்கு 949 கோடியே 49 லட்சமும், மகாராஷ்டிராவுக்கு நான்காயிரத்து 714 கோடியே 28 லட்சமும், புதுச்சேரிக்கு 13 கோடியே 9 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்