ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
x
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி லோகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரானஅரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆசிரியர்கள் வேலை நிறுத்ததால் பள்ளிகள் இயங்கவில்லை என்றும் , செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், தமிழக அரசின் நிதிநிலைமை சரியில்லை என்றும் கூறினார். 

இதனைக்கேட்ட நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்களை தற்போது நியமனம் செய்தால், தங்களை நிரந்தராமாக்க சொல்லி அவர்கள் போராட மாட்டார்களா என கேள்வி எழுப்பினார்கள். பின்னர், அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரங்களில் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக எந்த உத்ததரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். 

ஜாக்டோ ,ஜியோ போராட்டத்தை விலக்கி கொண்டால் அரசு தரப்பில் ஆதரவான முடிவு கிடைக்கும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் சட்டரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டால்,  அரசிடம் மனு அளிக்க வேண்டும் பின்னர் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

இவ்வழக்கில்  ஜாக்டோ ஜியோ அமைப்பும் , தமிழக அரசும்தான் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறி விசாரணையை அடுத்த மாதம் 18 ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்