70-வது குடியரசு தின விழா : தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர்

நாட்டின் 70-வது குடியரசு தின விழா தமிழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
70-வது குடியரசு தின விழா : தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர்
x
முப்படையினர் அணிவகுப்பு மரியாதை :



கொடியேற்றும் இடத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலாலை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இதை தொடர்ந்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்த ஆளுநர் பன்வாரிலால், முப்படை, சிறப்பு காவலர்கள், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

அரசு துறையின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு  :



தமிழக அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன.



இதை தொடர்ந்து வீர தீர செயல்புரிந்த காவலர்கள், சாதனையாளர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி முதலமைச்சர் பழனிசாமி கவுரவித்தார். இதனை தொடர்ந்து சங்கே முழங்கு என்ற பாடலுக்கு மாணவிகள் நடனமாடி பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றினர். 



திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டு குடியரசு தினக் கொண்டாடங்களை பார்த்து மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்