தந்தி செய்தி எதிரொலி : மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, ஒருமணி நேரத்தில் திறக்கப்பட்டது

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக ஆசிரியர்கள் போராட்டத்தால் பூட்டப்பட்ட மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, ஒருமணி நேரத்தில் திறக்கப்பட்டது.
x
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் இல்லாததால், கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானையடி தொடக்கப்பள்ளி பூட்டப்பட்டது. இதனால், அங்கு வந்த மாணவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். பள்ளி மூடப்பட்டிருந்ததும், மாணவர்களின் ஏமாற்றமும் குறித்து, காலை 11 மணிக்கு  தந்தி தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. இதன் எதிரொலியாக விரைந்து வந்த கல்வித் துறை அதிகாரிகள், திருவலஞ்சுழி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரை அழைத்துவந்து பள்ளியை திறந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்