கிணற்றில் தவறிவிழுந்து காளை பலி - கண்ணீர்விட்டு அழுத கிராம மக்கள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் காளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் காளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு மற்றும் கொத்தக்கோட்டை ஆகிய இரண்டு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடைபெற்றது. போட்டியை அமைச்சர் நீலோபர் கபீல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வாணியம்பாடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமாருக்கு சொந்தமான காளை முதற்பரிசை தட்டிச் சென்றது. இந்நிலையில், அந்த காளை அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட காளை, வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில்  உயிரிழந்தது. 

தகவல் அறிந்த கிராமமக்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் 
காளை மாட்டிற்கு அஞ்சலி செலுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் நிலோஃபர் கபில், காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முதல் பரிசை வென்ற காளை உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்