மேகதாது - முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

மேகதாது அணைக்கு உடனடியாக தடை பெறுமாறு தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
x
* மேகதாது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு பதில் வரவில்லை எனவும் கர்நாடக அரசு கூறியிருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும்

* தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியும் கூட, மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

* தற்போது, தமிழக அரசு எந்த கருத்தையும் சொல்லவில்லை என்ற புதிய காரணத்தை கூறி, விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகா வழங்கி இருப்பதாகவும்

* தமிழகம் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட அனுமதிக்க முடியாது என கூறிய மத்திய அரசும், அந்த அறிக்கையை மகிழ்ச்சியுடன் பெற்றிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். 

* தமிழகத்தின் கருத்தை கேட்காமல் தயாரித்த அறிக்கையை எப்படி பெற்றுக் கொண்டீர்கள்..? என இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்கவில்லை என விமர்சித்துள்ள அவர், 

* மேகதாது விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல், விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும்

* அதே வாதத்தினை  உச்சநீதிமன்றத்தில் முன் வைத்து, மேகதாது அணை கட்டுவதற்கு உடனடியாக தடை பெற வேண்டும் என்றும் முதலமைச்சரைக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின், தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்