50 ஆண்டுகளாக தொடரும் கல்லூரி கால நட்பு - பல நாடுகளில் இருந்து வந்த முன்னாள் மாணவர்கள்

சென்னை மருத்துவ கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பழைய மாணவர்கள் சந்திப்பில் பொன் விழா கொண்டாடியுள்ளனர்.
50 ஆண்டுகளாக தொடரும் கல்லூரி கால நட்பு - பல நாடுகளில் இருந்து வந்த முன்னாள் மாணவர்கள்
x
சென்னை மருத்துவ கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பழைய மாணவர்கள் சந்திப்பில் பொன் விழா கொண்டாடியுள்ளனர். சென்னை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 1969 ஆம் ஆண்டு முதல்  ஆண்டுதோறும் சந்திப்பை நடத்தி வருகின்றனர். அனைவரும் பல்வேறு நாடுகளில், பணிகளில் இருந்தபோதும் , ஆண்டுக்கு ஒருமுறை பழைய மாணவர்கள் சந்திப்பை தவறாது நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 50 வது ஆண்டாக பழைய மாணவர்கள் சந்திப்பை, சென்னை தி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். குடும்பத்தினருடன் ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகளில் அவர்களே பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்