நாகூர் கடற்கரையில் காத்தாடி திருவிழா - பட்டம் விட்டு மகிழ்ந்த குழந்தைகள், முதியவர்கள்

நாகூரில், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக காத்தாடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
நாகூர் கடற்கரையில் காத்தாடி திருவிழா - பட்டம் விட்டு மகிழ்ந்த குழந்தைகள், முதியவர்கள்
x
சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை  பாரம்பரிய விளையாட்டிற்கு அழைத்து செல்லும் விதமாக ஆண்டுதோறும்  நாகூரில், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக காத்தாடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  நாகூர் கடற்கரையில் நேற்று நடந்த காத்தாடி திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவியர், இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வண்ண வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி செல்போன், வீடியோ கேம் விளையாட்டு விளையாடுவதை விட சுற்றுபுறத்தில் ஓடியாடி பட்டம் விடுவது புதிய அனுபவத்தை கொடுத்துள்ளதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருவிழா ஏற்பாட்டாளர்கள் இலவசமாக பட்டங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்