கஜா புயலால் பாதித்த மக்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரும் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள்

பட்டுக்கோட்டையில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்துள்ளனர்.
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரும் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள்
x
பட்டுக்கோட்டையில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்துள்ளனர். அங்குள்ள தண்டா குளத்துக்கரை கிராமத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்து 50 குடும்பங்கள், பரிதவித்து வந்ததை அறிந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் சிலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த செலவில் வீடுகளை கட்டித்தரும் முயற்சியில் இறங்கினர். அதன்படி,  பத்து லட்ச ரூபாய் செலவில் மொத்தம் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.  அதில் இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க அவர்கள் திட்டமிட்டுள்ள அவர்கள், அந்த கிராமத்து மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். ரசிகர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்