கிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்

தமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
x
ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தை பற்றி குறை கூறும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். வி௫துநகரில் நடைபெற்ற கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில்  முத்தரசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முற்பட்ட வகுப்பினரில் பின்தங்கியவர்களுக்கு அரசியல் ஆதாயத்திற்காகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்