"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்."- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
x
கொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை காட்டுப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் 102-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரையிலும்,  அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன் என தெரிவித்தார். கொடநாடு கொலை,கொள்ளை விவகாரத்தில் தம் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் தி.மு.க. உள்ளதாக தெரிவித்த அவர், அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கியதை ஜீரணிக்க முடியாமல் தி.மு.க. திட்டமிட்டு நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்