"தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது" - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
x
சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், சிலம்பம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் ஆங்காங்கே நடந்து வருவதாக தெரிவித்தார். சேவல்கட்டு, கிடாய்முட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடை விதித்ததால் பொங்கல் பண்டிகை உற்சாகம் குறைந்துள்ளதாகவும், கிராமிய பாரம்பரியத்தை எடுத்துக்காட்ட விளையாட்டு போட்டிகள் நடத்த, அனுமதி வழங்க வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்