செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து : பெண்கள் விடுதியில் பரபரப்பு

சென்னையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் செல்போன் charger வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து : பெண்கள் விடுதியில் பரபரப்பு
x
சென்னை, சூளைமேட்டில், மகேஷ் என்பவருக்கு சொந்தமான பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்தநிலையில், விடுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைதொடர்ந்து, அக்கம்பக்கத்தினர், விடுதி உரிமையாளர் மகேஷ்க்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மகேஷ் உள்ளே சென்று பார்த்த போது, கட்டில் மெத்தை, தலையணை உள்ளிட்டவை தீயில் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து தீயை அணைக்க முற்பட்ட அவருக்கு, தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து  கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்ததால், விடுதிக்குள் இருந்த நான்கு பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அதற்குள் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. செல்போன் சார்ஜர் வெடித்ததால், இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த பெண்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்