சமத்துவ பொங்கல் விழா : சென்னை காவல் ஆணையர் பங்கேற்பு

சமத்துவ பொங்கல் விழாவில் சென்னை காவல் ஆணையர் பங்கேற்பு.
சமத்துவ பொங்கல் விழா : சென்னை காவல் ஆணையர் பங்கேற்பு
x
பானபுரீஸ்வரர் கோயிலில் சமத்துவ பொங்கல் விழா : கும்மியாட்டம் ஆடிய பெண்கள்



சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பொங்கல் விழா
உற்சாகமாக பங்கேற்ற சுற்றுலா பயணிகள்



பழங்குடியினர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை : 
மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொண்டாட்டத்தில் பங்கேற்பு



நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கடந்த 18 வருடங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் குடியிருந்த பளிகர் இன மலைவாழ் மக்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு கருப்பா நதி அருகே குடியமர்த்தபட்டனர்.  இங்கு 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மலையில் உள்ள தேன், காட்டு நெல்லி போன்றவற்றை பறித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவதில்லை. இவர்கள் பொங்கல் பண்டிகை  கொண்டாட கடந்த 2 வருடங்களாக சமூக அமைப்புகளும், புளியங்குடி காவல் துறையினரும் இணைந்து பல்வேறு உதவிகள் செய்து அவர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக மும்மதத்தினரும் இணைந்து, மலைவாழ் மக்களோடு பொங்கலிட்டு கொண்டாடினர்.


சிறை காவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா : குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது



மதுரை மத்திய சிறை காவலர்கள் குடும்பத்துடன் டிஐஜி சமத்துவ பொங்கல் கொண்டாடினர், மதுரை மத்திய சிறைச்சாலை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் விழா தமிழக சிறைத் துறை சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில்  பணியாற்றும் சிறைக் காவலர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கு கோலப்போட்டி விளையாட்டு போட்டிகள் மற்றும் பொங்கல் வைத்து சிறைத் துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் டிஐஜி பழனி அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர், இந்த சமத்துவ பொங்கல் விழாவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர், இதுமட்டுமல்லாமல் சிறைத்துறையை சேர்ந்த பணியாளர்களும் குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாடினர்.

சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா



Next Story

மேலும் செய்திகள்