ஜல்லிக்கட்டுக்கு சுறுசுறுப்புடன் தயாராகிவரும் காளைகள்...

ரத்தமும் சதையுமாக தமிழரின் பாரம்பரியத்​தை தட்டியெழுப்பும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக சுறுசுறுப்புடன் காளைகள் தயாராகி வருகின்றன.
x
மெரினா புரட்சியால் மீட்டெடுக்கப்பட்ட  ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த அம்மைநாயக்கனூரில் காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி, புருவம் உயர்த்த வைக்கிறது. சீரான சரிவிகித உணவு, நீச்சல் என சமருக்கு தயாராகிறது காளைகள். முன்னங்கால் வைத்து மண்ணைக் கிளறும் காளை, வெற்றியை ருசிக்காமல் வீடு திரும்பாது என்பது காளை வளர்ப்போரின் நம்பிக்கை. இதேபோல், சிவகாசி அடுத்த வடபட்டி கிராமம், ஜல்லிக்கட்டு உற்சாகத்தில் பரபரத்துக் கிடக்கிறது. ஆண்டுக்கணக்கில் பிள்ளையைப் போல் பார்த்து பார்த்து வளர்க்கப்படும் காளைகள், வாடிவாசல் களத்திற்கு தாயாரகின்றன. இவ்வளவு மூர்க்கத்தனத்துடன் வளரும் காளைகள், தம்மை  உணவளித்து பாதுகாக்கும் பெண்களிடம், குழந்தையை போல மாறிவிடுகின்றன... களமிறங்கிய அனைத்து இடங்களிலும், வெற்றிபெறுவது மட்டுமே காளையர்க்கும், காளைகளுக்கும் பெருமை.

Next Story

மேலும் செய்திகள்