ஜல்லிக்கட்டு : காவல்துறை வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருவோரை பாதுகாக்கும் வகையில் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு : காவல்துறை வேண்டுகோள்
x
* வரும் 15-ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், வீரர்களின் பாதுகாப்பிற்கும், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனே உயர்தர முதலுதவியும், சகல வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

* காளைகளை பிடிக்க தெரிந்த மற்றும் முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும். பார்வையாளர்களை பாதுக்காக்கும் வகையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதுடன்,

* தங்களுக்கென  ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறும், மதுரை மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்