காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...

பொது மக்களிடம் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள் மூலம் தினமும் 500 கிலோவாட் மின் உற்பத்தி செய்து தெருவிளக்குகள் மற்றும் சந்தைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
x
நெல்லை மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு, பசுமை மலைகள் அமைத்தல் , நுண்ணுயிர் உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக உணவு மற்றும் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியை நெல்லை மாநகராட்சி துவங்கியுள்ளது. பொதுமக்கள், உணவகங்கள் மற்றும் காய்கறி சந்தையில் இருந்து பெறப்படும் கழிவுகளை கூழாக்கி அதில் இருந்து பெறப்படும் "பயோகேஸ்" , ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த முறையில் தினமும் 500 கிலோ வாட் மின்சார உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந்த மின்சாரத்தை கொண்டு பூங்கா விளக்குகள், நகராட்சி விளக்குகளை ஓளிரச்செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்