கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

தென் மாவட்டங்களுக்கு செல்ல குவிந்தவர்களால் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
x
தென் மாவட்டங்களுக்கு செல்ல குவிந்தவர்களால் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. சானடோரியத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டதால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு  மற்றும் சிறப்புப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள்  கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. சொந்த ஊர்களுக்கு செல்ல இங்கு பயணிகள் குவிந்தனர் . அரசு பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோன்று, தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து, திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், மன்னார்குடி, பட்டுகோட்டை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.  அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,  பயணிகள் கூட்ட நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர். சிறப்புப் பேருந்துகள் செல்லும் கடைசி நிறுத்தம் வரை  பயணச் சீட்டு எடுக்க இடையில் இறங்கும் பயணிகளை நடத்துநர்கள் கட்டாயப்படுத்துவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்