ஸ்டெர்லைட் ஆலையின் சீலை அகற்றுங்கள் - வேதாந்தா

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் அனுப்பிய கடிதம் குறித்து, தலைமை வழக்கறிஞரிடம் அரசு கருத்து கேட்டுள்ளது.
x
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடைகோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. 

* இந்நிலையில் ஆலையை உடனடியாக திறக்க ஏதுவாக சீலை அகற்றி, ஆலை செயல்படத் தேவையான அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம், தமிழக தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. 

* இதேபோன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அந்நிறுவனம் எழுதிய கடிதத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ள 25 நிபந்தனைகளை செயல்படுத்த ஏதுவாக ஆலையின் சீலை அகற்றி, தேவையான அனுமதி தர கோரியிருந்தது. 

* இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக  தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம், தமிழக அரசு கருத்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்