கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை வரும் 21ஆம் தேதி தொடக்க விழா

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருகிற 21ஆம் தேதி முதல் கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை தொடங்குகிறது.
x
* பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவி ஏற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்த இரு ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றம், தேர்வுகளில் மாற்றம், நீட் தேர்வு பயிற்சி, சீருடைகள் மாற்றம் என பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில், இடம்பிடித்துள்ளது கல்விக்கென பிரத்யகே  தொலைகாட்சி.

* இந்த தொலைக்காட்சி சேனலின் ஸ்டூடியோ, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் 8-வது மாடியில் வருகிற 21ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

* கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. குறளின் குரல், குருவே துணை, வல்லது அரசு என்ற தலைப்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பேட்டி, கல்வித்துறை செயல்பாடுகள், கல்வித்துறையில் அளிக்கப்படும் மானியங்கள், கல்வித்துறை நலத்திட்டங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

* கல்வி தொலைக்காட்சி சேவையின் தரம், சேவையை படிப்படியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதால், பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சி, மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 


Next Story

மேலும் செய்திகள்