தலைமைச் செயலாளர் போல் பேசி 56 லட்சம் மோசடி செய்த பெண் - ஆடியோவை வைத்து போலீசார் தீவிர விசாரணை

திருப்பூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போல் பேசி 56 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் அரசு வேலைக்காக முயற்சித்துள்ளார்.  அப்போது, சாய்அருண் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ராஜேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களிடம் 36 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். 

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பேசுவதாக கூறி அவர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த சாய் அருணை பிடித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் மற்ற நபர்களிடம் 20 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்திருப்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளராக பேசிய ஆடியோவை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்