ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : "தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு" - அன்புமணி

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு - அன்புமணி
x
ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும்  அதனால் அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் குழு வரை அனைத்தும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாகவே செயல்பட்டன என்று குற்றம்சாட்டி உள்ளார். அந்த குழுவின் ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் தான் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது என்றும், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பே இறுதி தீர்ப்பாகவும் வர வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் தாமிர ஆலைகளுக்கு அனுமதியில்லை என சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது தான், இதற்கு ஒரே தீர்வு என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்