சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு
x
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கோயிலில் பெண்கள் நூதன வழிபாடு நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். புங்கறை பத்திரகாளி அம்மன் கோயில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சபரிமலையை  காப்போம் என்ற பதாகைகளை ஏந்தி வில்லிசை இசைக்க, பொங்கலிட்டு வழிபட்டனர். பத்து முதல் ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்றும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்