பொங்கலையொட்டி பானைகள் தயாரிப்பு தீவிரம் : வருமானம் இல்லை என தொழிலாளர்கள் வேதனை

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் திருத்தணி அருகே மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
x
பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு உள்ளது. இதற்காக திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை, ராஜா நகரம் , பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏரிகளில் களிமண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பானை தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். போதிய வருமானம் இன்றியும் பல ஆண்டுகளாக பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறும் தொழிலாளர்கள் பானை தயாரிப்பு தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்