பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு 10% தள்ளுபடி - ஓட்டல்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை அசைவ ஓட்டல்கள் பார்சல் வாங்க பாத்திரங்கள் மற்றும் துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளன.
x
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை  அசைவ ஓட்டல்கள் பார்சல் வாங்க  பாத்திரங்கள் மற்றும்  துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளன.  ஓட்டல்களில் இந்த அறிவிப்புக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து அசைவ உணவக உரிமையாளர்கள் கூறுகையில்,  பொதுமக்கள் கையில் பாத்திரங்களுடன் வருவதை ஊக்குவிக்கும் விதமான சலுகை அறிவித்துள்ளோம். இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பில் துணை நிற்பதில் மகிழ்ச்சிதான் என்று குறிப்பிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்