நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேங்குவதற்கு காரணம் என்ன?
x
கால தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற வாக்கியத்தை கேட்டிருப்போம். வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்டது இந்த வாக்கியம்.

ஆனால், குறித்த காலத்துக்குள் தீர்வு காண முடியாமல் போவதால் நாடு முழுவதும் 3.3 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதில், 2.84 கோடி வழக்குகள் கீழமை நீதிமன்றங்களிலும், 24 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 58 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 4 லட்சம் வழக்குகள், தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை குறைக்க, நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் 45 நாட்கள் கோடை விடுமுறை 30 நாட்களாகக் குறைக்கப்பட்டு பணி நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் சனிக் கிழமைகளிலும் விசாரிக்கப்படுகின்றன.

இதுதவிர, லோக் அதாலத், சமரச தீர்வு மையம் உள்ளிட்டவற்றாலும் வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. இருந்த போதும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 

ஒருபுறம் வழக்குகள் முடித்து வைக்கப்பட, மறுபுறம் புதிய வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நீதிபதிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், விசாரணை விரைந்து முடிக்கவில்லை என நீதிபதிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.வழக்குகளின் தகுதியை அறிந்து அதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தால், வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்பதே பலரின் கருத்தாகவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்