பாக்கு தட்டுகளை தயாரிக்கும் இயந்திரங்களின் தேவை அதிகரிப்பு...

பாக்கு மட்டை தட்டுகள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இவ்வகை இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
x
பாக்கு மர மட்டைகள்  வெயிலில் உலரவைக்கப்பட்டு, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பின்னர்  இயந்திரம் மூலம்  தட்டாக உருவாக்கப்படுகிறது. பாக்கு மட்டை தட்டுகள் முன்பு கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவற்றின் தேவை அதிகரித்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம், ஜனவரி 1 தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையே எனலாம். இதன் காரணமாக பாக்கு மர தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த காட்டுப் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து வருகிறது.  இதில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் தட்டுகள் வரை தயாரிக்கலாம் எனவும், தட்டுகள் தயாரானவுடன் தகவல் தரும் ஒளியமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பாக்கு மட்டையில் சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பது இவரது கருத்து.

Next Story

மேலும் செய்திகள்