கஜா புயல் பாதிப்பு - கொத்தடிமையான சிறுவன் மீட்பு

கஜா புயல் பாதிப்பில் மீளாத ஏழைச் சிறுவன், கொத்தடிமையாக ஆடு மேய்த்தபோது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கஜா புயல் பாதிப்பில் மீளாத ஏழைச் சிறுவன், கொத்தடிமையாக ஆடு மேய்த்தபோது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக கொத்தடிமையாக வேலை பார்த்த பட்டுக்கோட்டை அடுத்த கரிக்காட்டைச் சேர்ந்த இளைஞருக்கு அண்மையில் திருமணமானது. இதனால், அவரது தம்பியான சிறுவன், ஆடு மேய்க்கும் பணியில் கொத்தடிமையாக அமர்த்தப்பட்டுள்ளார். சிறுவனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட நிர்வாகம், கொத்தடிமைச் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் சேர்த்தனர். ஆனால், அவன் கொத்தடிமையாக இருந்ததை மறைத்தது ஏன் என கேள்வி எழுப்பும் மக்கள், கஜா பாதிப்புக்கு பிறகு நிறைய சிறுவர்கள் கொத்தடிமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்