உடல் உபாதைகளை கழிக்க இடமின்றி அவதி - வேதனையை தாங்கிக்கொண்டு ஆசிரியைகள் போராட்டம்

சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்த்தில் போதிய கழிவறைகள் இல்லாததால் ஆசிரியைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உடல் உபாதைகளை கழிக்க இடமின்றி அவதி - வேதனையை தாங்கிக்கொண்டு ஆசிரியைகள் போராட்டம்
x
சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்த்தில் போதிய கழிவறைகள் இல்லாததால் ஆசிரியைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் 4-வது நாளாக இடைநிலை ஆசிரியைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், மூவாயிரம் பேரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆசிரியைகளாக உள்ளனர். டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஒரு கழிவறையை மட்டுமே நம்பி உபாதைகளை கழிப்பதற்காக வரிசையில் காத்திருப்பது நெஞ்சைப் பிசையும் காட்சியாக உள்ளது. குழந்தைகளுடன், இரவுபகலாக கொட்டும் பனியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களது நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. மாநில கல்வித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் போதிய அளவிற்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்