உயர்மின் கோபுரம் அமைக்க 10-வது நாளாக எதிர்ப்பு: சங்கு ஊதி செவண்டி அடித்து நூதனப் போராட்டம்...

விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பத்தாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர்மின் கோபுரம் அமைக்க 10-வது நாளாக எதிர்ப்பு: சங்கு ஊதி செவண்டி அடித்து நூதனப் போராட்டம்...
x
ஈரோடு மூலக்கரை பிரிவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள், சங்கு ஊதி - செவண்டி அடித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 6 பெண்கள் உட்பட 11 விவசாயிகள் கடந்த 23 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு 2 பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளவர்களை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனி​டையே இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நாளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், போராட்ட களத்தில் உ​ரையாற்ற உள்ளதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்