ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் சிறுவர்கள் வளர்க்கும் காளை

மதுரை அருகே சிறுவர்களால் பாசத்தோடு வளர்க்கப்படும் காளை ஒன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு உற்சாகமாக தயாராகி வருகிறது.
x
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடு பிடி வீரர்களும், காளை மாடுகளும் உற்சாகமாக தயாராகி வரும் நேரம் இது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்ற மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறுவதால் அதற்கான ஆயத்தப்பணிகளும் விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்தும் காளைகளும், வீரர்களும் வருவது வழக்கம்.

இந்த நிலையில் பாலமேடு அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தில் சிறுவர்கள் பாசத்துடன் வளர்க்கும் காளை ஒன்று இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வருகிறது. அரசம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் பணம் வசூலித்து கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி அந்த ஊரில் உள்ள சிறுவர்களிடம் ஒப்படைத்தனர். கடந்த 4 ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் அன்பிலும், முறையான பராமரிப்பிலும் அந்த காளை வளர்ந்து நிற்கிறது. 

காலையில் எழுந்தவுடன் அதை குளிக்க வைப்பது தொடங்கி, நீச்சல் பயிற்சி, மாட்டின் கொம்புகளுக்கு பயிற்சி, சத்தான உணவுகளையும் சிறுவர்கள் வழங்கி வருகின்றனர். சிறுவர்களின் பராமரிப்பில் வளரும் இந்த காளையானது அனைவரிடமும் அன்பாக பழகி வருவது பார்ப்போரை ஆச்சரியப்படுத்துகிறது. ஏற்கனவே பல ஜல்லிக்கட்டு  போட்டிகளில் கலந்து கொண்ட இந்த காளையானது பரிசுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் காளை நிச்சயம் பல பரிசுகளை வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அரசம்பட்டி சிறுவர்கள்.

Next Story

மேலும் செய்திகள்