ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...

14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.
x
14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஏராளமான உயிர்களை அள்ளிச் சென்றது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியாக மாறி பல நாடுகளை புரட்டிப் போட்டது. இதில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னை, நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களே வெள்ளக்காடாக காட்சியளித்தது. உறவுகளையும், இருக்கும் இடத்தையும் தொலைத்து விட்டு உயிரைப் பிடித்துக் கொண்டு தஞ்சமடைந்த மக்கள், இன்றும் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உள்ளனர். 

கடலூர் மாவட்ட மக்கள் இன்னமும் சுனாமியின் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். ஒரு மகனையும், ஒரு மகளையும் சுனாமியின் போது இழந்த பூங்கா என்ற பெண், பிள்ளைகள் இருந்திருந்தால் இந்நேரம் திருமணம் செய்து வைத்திருப்பேன் என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். தன் மனைவி மற்றும் பிள்ளைகளை எல்லாம் ஒரே நேரத்தில் இழந்து தவிக்கும் வலி, என்றைக்கும் மாறாத வடுவாய் மாறி இருப்பதாக கூறுகிறார் கடலூரை சேர்ந்த பலராமன்... 

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவிகள் செய்து வந்தாலும், இன்னும் சிலருக்கு அது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 14 ஆண்டுகளாக வடுவாய் மாறிப் போன ரணங்களுக்கு மருந்தாக அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதே இந்த நாள் நமக்கு நினைவுபடுத்திச் செல்லும் கூற்றாக இருக்கிறது.. 

Next Story

மேலும் செய்திகள்