அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவினர் மோதலால் பரபரப்பு

கோவில்பட்டியில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
கோவில்பட்டியில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் மேடையில் ஏறியபோது, ஒரு கோஷ்டியை சேர்ந்தவரை முதலில் பேச சொல்லுமாறு சிலர் குரல் எழுப்பினர். அதற்கு மற்றொரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் முன்னிலையில், இரு கோஷ்டிகளும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்