ரூ. 1 கோடி பஞ்சலோக முருகன் சிலை மீட்பு

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை, சென்னையில் மீட்கப்பட்டு உள்ளது.
ரூ. 1 கோடி பஞ்சலோக முருகன் சிலை மீட்பு
x
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை, சென்னையில் மீட்கப்பட்டு உள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஈக்காட்டுத்தாங்கல் லேத் பட்டறை உரிமையாளர் சிவகுமார் என்பவரை கைது செய்து, முருகன் சிலையை பறிமுதல் செய்தனர். கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிவக்குமார், நாளை ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என்று சிலை கடத்தல்தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முருகன் சிலை 3 கிலோ 50 கிராம் எடை கொண்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன், அரக்கோணம் அருகே நெமிலி என்ற இடத்தில் உள்ள இந்து கோவிலில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டது என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்