மத்திய, மாநில அரசுகளை அகற்ற சபதம் எடுப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
x
சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அவர், 500க்கும் மேற்பட்டோருக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு திமுக ஆட்சியின் போது பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என்றார். மத்திய மற்றும் மாநில அரசுகளை அகற்ற சபதம் எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்